Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிபத்துக்குள்ளாகும் சாரதிகள் மருத்துவ பரிசோதனைக்கு

விபத்துக்குள்ளாகும் சாரதிகள் மருத்துவ பரிசோதனைக்கு

சாரதிகளின் கவனயீனமே, பெரும்பாலான வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் என பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மதுபானம் அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக, வீதிவிதி தொடர்பான சட்டத்திற்கு அமைய 25,000 ரூபா அபராதம் விதிக்க முடியும்.

அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடியும்.

அபாராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

வீதி விபத்துக்களால், மரணங்கள் ஏற்படும்போதுஇ சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles