நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிதியமைச்சும் மத்திய வங்கியும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் செயற்படும் குழுக்கள் பொருத்தமான மாற்று யோசனைகளை முன்வைக்க முடியுமானால் நாம் அது தொடர்பில் கவனம் செலுத்த தயாராகவே உள்ளோம்.
அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.