குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு இலவச சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (18) நாடாளுமன்றத்தில் கின்ஸ் நெல்சன் எம்.பி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பணம் செலுத்தும் திறன் உள்ளவர்களுக்கு கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்த நேரிடும் எனவும், மீதியை மானியமாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் பெருந்தொகையான மானியத்தின் அடிப்படையிலேயே கல்வி கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், வருடத்திற்கு இரண்டு பில்லியன் மானியமாக வழங்கப்படுவதாகவும், ஆனால் நிதி நெருக்கடி காரணமாக திறைசேரியால் அந்தப் பணத்தை வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.