உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாக மார்ட்டின் ரைசர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாத தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான கடனில் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.