போலந்தின் வொர்சோ விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
வொர்சோவிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Chrcynno விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்திற்கு நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
செஸ்னா 208 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், மோசமான வானிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.