Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது

அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை – மத்துகம வீதியில் பயணித்த சந்தேகநபர் தொடங்கொட நுழைவாயில் வழியாக மாத்தறை நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து வெலிபென்னை நோக்கி பயணிக்க முற்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பின்னால் துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு அவரை நெடுஞ்சாலையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மத்துகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், அவரை மத்துகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் தொடங்கொட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles