களனி ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுக்க பகுதியை சேர்நத 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் மேலும் இருவருடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
விருந்துபசாரம் ஒன்றில் மது அருந்தி விட்டு இவர்கள் ஆற்றில் நீராடச் சென்றதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும் காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.