ஒரு கிலோ கிராம் கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோழியிறைச்சி ஒரு கிலோ கிராம் ஒன்றின் விலை 1,450 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.