Saturday, June 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கான விசேட சுற்றுநிருபம் வெளியீடு

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றுநிருபம் வெளியீடு

சேவைமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய, வேதனமற்ற விடுமுறையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை ஏற்படுகளின்படி, 2023 ஜுன் 11 ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறையைப் பெற்ற ஒரு உத்தியோகத்தர், அந்த விடுமுறைக் காலம் முடிவடைந்து மீள சேவைக்கு அறிக்கையிட்டதன் பின்னர், அவரின் சேவை மூப்பு, அவர் குறித்த சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இருந்த சேவை மூப்பாக அமையும்.

இந்த சுற்றறிக்கை அறிவுறுத்தலை, மாகாண அரசாங்க சேவைகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேவையான நடைமுறை ஒழுங்குகள், ஆளுநரின் ஆலோசனை மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாகாண பிரதம செயலாளர்களினால் அறிமுகப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles