Tuesday, May 19, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவினால் இலங்கைக்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

இந்தியாவினால் இலங்கைக்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த 24 பேருந்துகள் வவுனியா (4), கிளிநொச்சி (4), மன்னார் (3), முல்லைத்தீவு (3), யாழ்ப்பாணம் (4), பருத்தித்துறை (3) காரைநகர் (3) என வடமாகாண சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொடஇ ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles