பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த 21 வயதான சமோதி சந்தீபனியின் இறுதிக் கிரியைகள் இன்று (14) நடைபெறவுள்ளன.
வயிற்று நோயினால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமோதி சந்தீபனி ஜயரத்ன (21) என்பவர் தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.