ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு 28% வரி விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தகைய வீடியோ கேமை பதிவிறக்கம் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தில் 28மூ பொருந்தக்கூடிய வரியாக செலுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.
அப்படி வரி விதிக்கப்பட்டால், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாகக் கருதப்படும் வீடியோ கேம்களின் உருவாக்கம் தடைபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் தற்போது 900க்கும் மேற்பட்ட புதிய வீடியோ கேம்களை உருவாக்குபவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.