பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார்.
அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடியை ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரொன் உற்சாகமாக வரவேற்றுள்ளார்.
இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.