அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட வடக்கு புகையிரத மார்க்கத்தின் செயற்பாடு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்து பாரம்பரிய சடங்குகளின் பின்னர் புனரமைக்கப்பட்ட மார்க்கத்தின் மூலமாக ரயில் அனுராதபுரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹோ முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டது.
அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த மார்க்கத்தினுடான ரயில் சேவையினை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.