விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை ரத்துச் செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் இடைத்தரகர்கள் வாயிலாக காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்து அதிக இலாபத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பொருளாதார மத்திய நிலையங்களில் இடைத்தரகர்களிடம் காய்கறி மற்றும் பழங்களை பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்களின் வர்த்தக நிலையத்துக்கான குத்தகை உரிமப்பத்திரங்களை இரத்துச்செய்து ஏனைய வர்த்தக முயற்சியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.