Sunday, February 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்

தமிழகம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளது.

தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் தருவைகுளம் கடற்கரை பகுதியில் இன்று (12) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத சிலர் சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்

எனினும் காவல்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் 1.25 டன் எடையுள்ள பீடி இலை பொதிகள் சிறிய ரக சரக்கு வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles