Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் (12) கற்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கடல் மார்க்கமாக கடத்த முயற்பட்ட சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles