Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2250 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2250 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 கிராம் 400 மில்லிகிராம் கொக்கெய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபருக்கு சொந்தமான கடைக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2250 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்தொலுவ பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர்.

சந்தேகநபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles