அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும பயனாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் கோரப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும வேலைத்திட்டத்தில், ஆண்டுதோறும் தகுதியுடையவர்களை உள்வாங்கும் மற்றும் தகுதியற்றவர்களை நீக்கும் செயல்முறையும் அடங்குகின்றது.
சுமார் 1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டும் பணியை ஜனாதிபதி ஒப்படைத்தார்.
இது தொடர்பான 03 வருட திட்டம் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.