Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் மழை பெய்யும் வேளையில் கடுமையான காற்று வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles