இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
புலனாய்வுப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று நேற்று (17) அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கலைத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ஹிரு