Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை துயரத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் சட்;டவிரோதமாக பிரவேசித்து, கடற்றொழில் ஈடுபட்ட நிலையில், குறித்த 15 இராமேஸ்வர மீனவர்களும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles