பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்தி கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் குறித்த யுவதிகள் பயணித்த போது நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும் அதனை செலுத்திய யுவதிஇ பொலிஸார் சமிக்ஞையை பொருட்படுத்தாது வாகனத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் பொலிஸார் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸாருடன் அந்த யுவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாகனத்தை செலுத்தியவரும் அவரோடு பயணித்த இருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் நாவல மற்றும் கொழும்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.