தாதியர் சேவைக்காக மேலும் 3,315 பயிற்சித் தாதியரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் சம்பந்தப்பட்ட பயிற்சி தாதியர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட வுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் ஒரு அம்சமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக நியமனங்கள் வழங்கப்படும்.
இதற்கு மெலதிகமாக ஏனைய பகுதி பயிற்சி தாதியார்களுக்கும் சமகால நியமன கடிதம் வழங்கப்படவுள்ளது.
நாடாளவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பயிற்சி பாடசாலைளில் மேற்படி தாதியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
2018 மற்றும் 2019 கல்வி பொது தராதா உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு இணங்க 3315 பயிற்சி தாதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.