Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் - மஹிந்தானந்த அளுத்கமகே

ரணில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் – மஹிந்தானந்த அளுத்கமகே

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையை மீட்டெடுக்க வழிவகுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

உலகப் போராட்டங்களினால் பல நாடுகள் வீழ்ச்சியடைந்து பல வருடங்களாக அராஜகமாக இருந்த போதிலும், ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தலையீட்டினால் இலங்கையில் ஒரு வருடத்திற்குள் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்ட நாளாக ஜூலை 9ஆம் திகதி வரலாற்றில் இடம்பெறும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கைகள் தற்போது அரகலயவின் நிகழ்ச்சி நிரலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எவரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles