செய்திகள்உலகம்போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்ல தடை

போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்ல தடை

சீனா சமீப காலமாக தாய்வான் கடற்பகுதியில் போர்ப் பயிற்சிகளை நடத்தி அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சி நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நேரடி இராணுவ பயிற்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியானது இன்று (10) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயிற்சி நடைபெறும் பகுதிகளில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles