லங்கா ஐஒசி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருள் விலைகளையும் அதிகரித்துள்ளது.
இதன்படி அனைத்து வகையான பெற்றோல் ஒரு லீற்றர் 35 ரூபாவாலும், அனைத்து வகையான டீசல் ஒரு லீற்றர் 75 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.
புதிய விலைகள் பின்வருமாறு:
பெற்றோல் 92 (ஒக்டேன்) – 338 ரூபா
ஒக்டேன் 95 – 367 ரூபா
பெற்றோல் யூரோ 3 – 347 ரூபா
ஒட்டோ டீசல் – 289 ரூபா
சூப்பர் டீசல் – 327 ரூபா