Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இன்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த ஆங்கில டிப்ளோமாதாரிகள், கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தங்களது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில், ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அவர்களுக்கு இன்று ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles