Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றின், இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக கீசி கார்டி 87 ஓட்டங்களையும், ஜொன்ஷன் சார்ளஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 34 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 13 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இலங்கை அணி 244 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles