Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபர்கள் மூவர் மீண்டும் விளக்கமறியலில்

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபர்கள் மூவர் மீண்டும் விளக்கமறியலில்

களுத்துறையில் உள்ள விருந்தகம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்து 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், உயிரிழந்த சிறுமியின் 19 வயதுடைய நண்பி மற்றும் அவரின் ஆண் நண்பருமே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலதிக வகுப்பு ஒன்றின் ஆசிரியரையும் மீள விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு சம்பவங்களுடனும் தொடர்புடைய 4 சந்தேகநபர்களும் எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles