2023 ஆம் ஆண்டில் இதுவரை 150,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவானோர் வேலைக்காக சென்றுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவார்கள் என நம்பப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே எனவும் அவர் கூறினார்.
