Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுஓய்வு பெறுவதாக அறிவித்தார் தமிம் இக்பால்

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தமிம் இக்பால்

பங்களாதேஷ் அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (06) அறிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பின்னர், சட்டோகிராமில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசும்போது தமிம் இக்பால் இந்த முடிவினை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் 34 வயதான பங்களாதேஷ் நட்சத்திரம் தனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

2007 பெப்ரவரியில் தமிம் இக்பால் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

பங்களாதேஷ் அணிக்காக 70 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 78 டி:20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த இடது கை தொடக்க ஆட்டக்காரர் சர்வதேச கிரிக்கெட்டில் 25 சதங்கள் மற்றும் 94 அரை சதங்களுடன் 15,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

தமிம் இக்பால் ஏற்கனவே கடந்த ஆண்டு டி:20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மற்றும் ஏப்ரல் மாதம் அயர்லாந்துக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.

தமிம் இக்பாலின் இந்த அறிவிப்பானது இந்தியாவில் இந்த வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பங்களாதேஷ் அணிக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles