Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லையடி ஏ9 வீதியில் பாதையை கடப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த சிறுவனை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளது.

இதன்போது பளை – முல்லையடியைச் சேர்ந்த 12 வயதுடைய குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கெப் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles