Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா திட்டத்தை இடைநிறுத்த அனுமதிக்க முடியாது - டயனா கமகே

கஞ்சா திட்டத்தை இடைநிறுத்த அனுமதிக்க முடியாது – டயனா கமகே

கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை வலயத்துள் மேற்படி கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த செயற்றிட்டத்தால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும்.

மேலும் இச்செயற்றிட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை,இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு சுமார் 11 முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கும் அதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கும் அவர்களே பொறுப்பாவார்கள். இவ் உற்பத்திகள் நாட்டின் வருமானத்துக்கு பங்களிக்கும்.

கடந்த கால முயற்சியை தோற்கடித்தது போன்று இந்த செயற்றிட்டத்தை தோற்கடிக்க முடியாது. அதற்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles