Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை காரணமாக 2,242 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 2,242 பேர் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களில், 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 604 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles