Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம் , மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.

BOI ஆடைகள் தொழிற்சாலை குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார் . இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சர் அவர்களால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles