கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
காதலியை கொடூரமாக தாக்கியதற்காக அவரது சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் தாக்குதலால் குறித்தபெண் பலத்த காயமடைந்து தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தனமல்வில ரணவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, சந்தேக நபருக்கு எதிராக உடனடியாக தனமல்வில பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்