ஜப்பான் அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.