Tuesday, July 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலனை கடத்திய காதலி கைது

காதலனை கடத்திய காதலி கைது

பின்வத்த பிரதேசத்தில் தன் காதலனை கடத்திச் சென்றமை தொடர்பில் யுவதி ஒருவவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதல் உறவை புறக்கணித்த இளைஞன் ஒருவரே குறித்த யுவதியால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வத்த பிரதேசத்தை சேர்ந்த கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞனும் தேடப்படும் யுவதியும் காதலித்து வந்ததாகவும், குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles