இலங்கை மகளிர் அணித் தலைவி சாமரி அதபத்து, ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதபத்துவின் மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக ஆறு இடங்களுக்கு முன்னேற்றி அவரை முதல் இடத்துக்கு கொண்டு சேர்த்தது.
இதன் மூலம் கடந்த மே 10 முதல் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் பெத் மூனியை தரவரிசையில் பின் நகர்த்தினார் சாமரி அதபத்து.
நியூஸிலாந்துடனான முதல் போட்டியில் 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களும், இறுதிப் போட்டியில் 80 பந்தில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களும் எடுத்ததற்காக சாமரி அதபத்து ‘மேட்ச் ஆஃப் தி மேட்ச்’ விருதுகளை வென்றதுடன், ‘தொடரின் வீராங்கனை’ என்றும் பெயரிடப்பட்டார்.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.