கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணி பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலிலிருந்து மனித கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கரு சுமார் எட்டு மாத வயதுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையின் வடிகால் அமைப்பைச் சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளி ஒருவர் இந்தக் கருவைக் கண்டு மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பிரிவில் தாயொருவர் அதனை வடிகாலில் வீசியுள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்இ கருவை மிருகம் இந்த இடத்திற்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மனிதக் கரு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி அதனைப் பரிசோதிக்கும் வரையில் உறுதியான அறிக்கை எதுவும் வெளியிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.