உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த வியாழன் முதல் வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட்டது.
ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, CSEயும் மூடப்பட்டது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தனது திட்டத்தை வெளியிடும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், விசேட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று காலை கொழும்பு பங்குச் சந்தை, வர்த்தக வங்கிகள் திறக்கப்படுகிறது.