Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேல் - இலங்கை இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படும்

இஸ்ரேல் – இலங்கை இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படும்

இஸ்ரேலுக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரண்டு நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் இடம்பெற்றது.

இதன்படி, இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்க வரை நேரடி பயணிகள் விமான சேவைகள் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இஸ்ரேலின் அகியா (Akia) விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள் இலங்கைக்கான இந்த சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles