Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் – பள்ளமடு பகுதியில் 86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் குறித்த இருவரையும் கைது செய்து சோதனைக்குட்படுத்திய போதே இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பேசாலை, மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles