Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளம் கடலில் மூழ்கி தாத்தாவும், பேரனும் உயிரிழப்பு

புத்தளம் கடலில் மூழ்கி தாத்தாவும், பேரனும் உயிரிழப்பு

புத்தளம் – நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த 60 மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தாவும், பேரனும் ஆவர்.

கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த முதியவர், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போதுஇ நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்து வந்த முதியவர், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles