திரிபோஷா உற்பத்தி மீள ஆரம்பமாகும் வரை 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று சத்தான உணவு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச குடும்ப நல சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்இ குழந்தைகள் முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுவதால், திரிபோஷாவிற்கு பதிலாக முட்டைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.