Tuesday, October 28, 2025
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் ஒரு சிக்கலில் சிக்கியது இலங்கை

மேலும் ஒரு சிக்கலில் சிக்கியது இலங்கை

ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டு கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை C நிலைக்கு தரம் குறைத்துள்ளது.

முன்னதாக, எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனமும் இலங்கையை CCC நிலையில் இருந்து CC நிலைக்கு குறைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles