Saturday, January 24, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம்

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம்

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.

ஆனால் சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை தொடக்கம் உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற டெக்டோனிக் எல்லை, மத்திய மலையகத்தைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கம் தொடர்பான பகுதிகள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏற்பட்டால் அது சுமாத்ராவின் முனையில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் அண்மைக்காலமாக அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles