Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுருவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி, காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் அண்மையில் கலகம கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று (02) காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துவெல்ல வாய்க்காலுக்கு அருகில் உள்ள கால்வாயில் படகில் சென்று கொண்டிருந்தபோது, ​​முகத்துவாரத்திற்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சடலம் காணாமல் போனவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.

உயிரிழந்தவர் 69 வயதுடைய மஹதுருவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles