Sunday, November 17, 2024
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கைவிடும் அரசாங்கம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கைவிடும் அரசாங்கம்

தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைவில் மறுசீரமைக்க தவறினால், 6,000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாளும் விமானங்களைக் கண்டிராத, விமானங்களில் காலடி வைக்க முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் பணத்தினாலேயே இந்த சேவைகள் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

எமக்கென தனியொரு விமான சேவை இருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும்இ அதனை நடத்திச் செல்வதற்கான செலவு மிக அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles